ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரசுக்காக தனி சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களுக்குபேட்டியளித்தார் .அப்போது அவர் கூறும்போது,
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு அறிவித்தபடி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோட்டில் சென்ற 11 ஆம் தேதி இரவு தாய்லாந்தை சேர்ந்த 6 பேர் வந்துள்ளனர். அவர்கள் ஈரோட்டில் உள்ள இரண்டு மசூதிகளில் தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் கடந்த 16ஆம் தேதி ஊருக்கு செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை. அதைத்தொடர்ந்து தான் இந்த ஆறு பேர் பற்றிய விவரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது அதைத் தொடர்ந்து அந்த 6 பேரும் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதேபோல் கோபியில் குடிநீர் திட்ட பணிக்காக வந்த வெளி மாநிலத்தவர்கள் 24 பேரில் 2 பேருக்கு மட்டும் காய்ச்சல் இருந்ததால் அவர்களை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளோம். மீதமுள்ளவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை கரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இல்லை. தாய்லாந்தில் இருந்து வந்தவர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்தவர்கள் மட்டும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
தாய்லாந்தை சேர்ந்வர்களின் ரத்த மாதிரி முடிவுகள் இன்னும் வரவில்லை.வந்த பிறகுதான் என்ன காய்ச்சல் என்று தெரியவரும். ஈரோடு மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த 74 பேரில் 41 பேருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிய வந்துள்ளது. மீதி உள்ள 23 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.சமூக நலனுக்காகவும் சுய பாதுகாப்புக்காகவும் நாளை நடைபெறும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். ஈரோடு மாவட்ட எல்லைப் பகுதியான பர்கூர் மற்றும் தாளவாடியில் உள்ள சோதனை சாவடியில் வெளி மாநில வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
காய்கறி மருந்துகள் போன்ற அத்தியாவசியமான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் எனக் கூறினார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.