Advertisment

இத்தாலியில் இருந்து பேராவூரணி வந்த இளைஞருக்கு கரோனா பாதிப்பு இல்லை... வதந்தி பரப்பினால் நடவடிக்கை

இத்தாலியில் இருந்து பேராவூரணி வந்துள்ள பொறியாளருக்கு கரோனா வைரஸ் இருப்பதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டதுடன் பொறியாளரின் குடும்பத்தினரும் மன உளைச்சலில் உள்ளனர். இத்தாலியில் இருந்து வந்துள்ள பொறியாளருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை சுகாதாரத்துறை உறுதியாக கூறியுள்ளது.

Advertisment

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சிதம்பரம் சாலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இத்தாலியில் பொறியாளராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மார்ச்.18 ஆம் தேதி புதன்கிழமை காலை இத்தாலியில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்து, அன்று மாலையே கார் மூலம், தனது சொந்த ஊரான பேராவூரணி திரும்பியுள்ளார்.

Advertisment

 no Corona attack on youth returning from Italy...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இவர் இந்தியா வருவதாக இருந்த நிலையில், இத்தாலியில் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பில் 15 தினங்கள் வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில், முன்னெச்சரிக்கையாக ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா நோய்த் தொற்று ஏதும் இல்லை எனத் தெரியவந்தது.

இதன் பிறகு உரிய மருத்துவச் சான்றிதழ்களுடன் இந்தியா வந்துள்ளார். அவருக்கு மும்பை விமான நிலையம், மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களிலும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில் ஆரோக்கியமாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தாமாகவே முன்வந்து பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை மாலை சென்று, தான் இத்தாலியில் இருந்து ஊர் திரும்பிய விபரத்தை தெரிவித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு, மருத்துவ அலுவலர்களின் ஆலோசனை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில், "இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய வாலிபருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்" என்ற ரீதியில் சிலர் இளைஞரின் படத்துடன் வதந்தி பரப்பினர். இதனால் பேராவூரணி பகுதியில் அச்சமான சூழல் உருவானது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர், இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இளைஞரை நேரில் சந்தித்து மருத்துவ பரிசோதனை நடத்தி, அவரிடம் விபரங்களை கேட்டறிந்தனர்.இதில் அவருக்கு நோய்த்தொற்று ஏதும் இன்றி, உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சுகாதாரத் துறை கண்காணிப்பில் சில தினங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளார்.

 no Corona attack on youth returning from Italy...

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை கூறுகையில், "ஆரோக்கியமான நிலையில் உள்ள எனது மகன் குறித்து, முகநூலில் சிலர் தவறாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதனால் எனது மகன் மட்டும் இன்றி, எங்கள் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் ஈவு இரக்கம் அற்றவர்கள். அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி கூறுகையில், "வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

corona virus Peravurani Thanjai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe