ADVERTISEMENT

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்:திமுக மனு

06:55 PM Apr 30, 2019 | kalaimohan

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தலைவர் தனபாலை அதிமுக சட்டப்பேரவை கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் கடந்த 26 ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தினகரன் அணியில் பொறுப்பில், பதவியில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் இருக்கிறார்கள். மேலும், டிடிவி தினகரனோடு 3 பேரும் இருக்கும் புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும்

ADVERTISEMENT

அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயல்களில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோர் ஈடுபட்டுள்ளார்கள் எனவே 3 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்திருந்தார்.

புகார் கொடுத்த 26 ஆம் தேதியே திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் முடிவுகள் வர உள்ள நிலையில் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது. 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும். ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் அதிமுக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் தற்போது சபாநாயகர் தனபால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தினசபாபதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டிஸில் மூன்று பேரும் 7 நாட்களுக்குள் இதுதொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை அடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT