Advertisment

போட்டி இல்லை... ரேட்டும் இல்லை... தேர்வாகும் பெண் ஊ.ம.தலைவர் 

பலமுறை நீதிமன்றங்களின் படியேறி நீதிமன்ற கண்டனங்களுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்தால் பல்வேறு குளறுபடிகள் வரையரை என்பதை கண்துடைப்பாக செய்து விட்டு தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது. அதிலும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு வேறு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர்.

Advertisment

No Competition ... No Rate ... The Chosen Woman is the Head of the Panchayat Union

தேர்தல் ஆணையத்தின் இந்த தேர்தல் அறிவிப்பை பார்த்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆளும் அதிமுக சொல்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாக தற்போதை தேர்தலில் 70 சதவீதம் உள்ளாட்சி அமைப்புகளை ஆளுங்கட்சி கூட்டணி பிடித்தால் உடனே மாநகராட்சி வரை தேர்தல் நடத்தப்படும் இல்லன்னா தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பு என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Advertisment

இது ஒருபக்கம் இருந்தாலும் 27, 30 ந் தேதி நடக்க உள்ள தேர்தலுக்கானபங்கீடுகளில் பல குழப்பங்களுக்கு மத்தியில் அதிமுக தலைமை பல இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

No Competition ... No Rate ... The Chosen Woman is the Head of the Panchayat Union

நேற்றே வேட்பு மனு தாக்கல் தேதி முடிந்து விட்டது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த 2001 முதல் 2016 வரை தொடர்ந்து மூன்று முறை முருகேசன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இந்த முறை 5 கிராமங்களை உள்ளடக்கிய கண்டியாநத்தம் ஊராட்சி இடஒதுக்கீட்டில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து அவரது மனைவி செல்வி கண்டியாநத்தம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். சுமார்1500 வாக்காளர்களையும் பல இன மக்களையும் கொண்ட இந்த ஊராட்சியில் கடைசி நாள் வரை இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் அவரே தலைவராக தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

No Competition ... No Rate ... The Chosen Woman is the Head of the Panchayat Union

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பதவி ரூ 50 லட்சங்கள் வரை ஏலம் போன நிலையில் கண்டியாநத்தம் ஊராட்சியில் மட்டும் எந்த விலையும் இல்லை. போட்டியும் இல்லை என்ற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் செல்வி.

இதனால் இவருக்கு வாழ்த்துகளும் கிராம மக்களுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

panchayat local election pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe