'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை!' - அரசு டவுன் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு,அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை முதல்உத்தரவாக வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வரும் வகையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உடனடியாக ஸ்டிக்கர் தயாரிக்கப்பட்டு அனைத்து நகரப் பேருந்துகளிலும் ஒட்டப்பட்டு வருகிறது. ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

govt bus pudukkottai tn govt
இதையும் படியுங்கள்
Subscribe