Advertisment

சமையல் காஸ் சிலிண்டர் விலையில் மாற்றமில்லை!!

No change in cooking gas cylinder price !!

Advertisment

நடப்பு பிப்ரவரி மாதத்திலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா காஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சேலத்தில், இவ்வகை சிலிண்டர் 728 ரூபாய்க்கும், சென்னையில் 710 ரூபாய்க்கும் கிடைக்கும். உலகச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், உள்ளூர் சந்தை தேவை, உற்பத்தித் திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் காஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமற்ற காஸ் சிலிண்டர் விலை, தலா 50 ரூபாய் வீதம், ஒரே மாதத்தில் இரண்டுமுறை உயர்த்தப்பட்டது. சந்தையில் திடீர் தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலை உயர்வும் அதன் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஒரே மாதத்தில் அப்போது 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டதுவாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது. இதனால், டிசம்பர் மாதம் வீடுகளில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர் விலை சென்னையில் 710 ரூபாய்க்கும், டெல்லி மற்றும் மும்பையில் 694 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 720.50, சேலத்தில் 728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஜனவரி மாதமும் இந்த விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு பிப்ரவரி மாதத்தில் விலையில் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மானியமற்ற சிலிண்டர் விலையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் மாத விலையே தொடரும் என எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

அதேநேரம், வணிக நோக்கில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நடப்பு மாதத்தில் 191 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால், இவ்வகை காஸ் சிலிண்டர் விலை 1425 ரூபாயில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து 1616 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி நகரங்களிலும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை 191 ரூபாய் உயர்ந்துள்ளது.

gas cylinder price price
இதையும் படியுங்கள்
Subscribe