Advertisment

தமிழகத்தில் முழுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை-முதல்வர் ஆலோசனை குறித்து வெளியான தகவல்!

No chance of a complete freeze in Tamil Nadu - Information released about the Chief Minister's advice!

தமிழகத்தில் கரோனாமீண்டும் பரவிவரும் நிலையில்,திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமேஅனுமதிக்கப்பட வேண்டும். துக்க நிகழ்வுகளில் 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. அரங்கங்களில் நடக்கும் அரசியல், கல்வி, சமுதாய நிகழ்வுகளில் 200 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி. மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க தடை உள்ளிட்டபல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, அவை செயல்படுத்தப்பட்டும் வருகிறது. தொடர்ந்து கரோனாபாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் சிலகட்டுப்பாடுகளை அதிகரிக்கலாமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

Advertisment

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன்நடைபெற்ற ஆலோசனை கூட்டம்நிறைவடைந்த நிலையில்தமிழகத்தில் முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் பிளஸ் டூ பொதுத் தேர்வை ஒத்தி வைப்பது குறித்துஅதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

edappadi pazhaniswamy Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe