ADVERTISEMENT

தொழில்நுட்ப கோளாறால் சான்றிதழ் பதிவேற்றம் இல்லை! குரூப் 4 தேர்ச்சி பெற்ற 8 பேர் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதி!

11:12 PM Mar 19, 2020 | kalaimohan

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இயலாத 8 பேர், குருப் 4 நேர்முக தேர்வின் சான்றிதழ் சரிப்பார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT


டிஎன்பிஎஸ்சி 2019-2020 ஆம் ஆண்டிற்கான குருப் 4 தேர்வு அண்மையில் நடத்தி முடிக்கப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு முடிவுகள் மார்ச் மாதம் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தங்களை அழைக்கவில்லை எனக் கூறி தேர்வு எழுதிய மஞ்சுளா உள்ளிட்ட 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குருப் 4 தேர்வுக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும் போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 10-வது வகுப்பினை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக, குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், வழக்கு தொடர்ந்த 8 பேரை குருப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக 2 வாரத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT