'No caste songs' - police warning to drivers, conductors

நெல்லையில் அண்மையாகவே பள்ளி மாணவர்கள் மோதல் போக்குகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்நிலையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மத்தியில் பேசிய காவல் ஆணையர், நெல்லையில் பேருந்துகளில் சாதிய ரீதியான பாடல்களை ஒளிபரப்பக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

பொதுவாக பேருந்து நிலையங்களில் இருந்ததுதான் மாணவர்களின் நாள் தொடங்குகிறது. எனவே மாணவர்களை கையாளும் முக்கிய இடமாக பேருந்து நிலையம் உள்ளது. சாதிய ரீதியான பாடல்களை ஒளிபரப்பினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். பேருந்து நிலைய வளாகத்தில் ஏதாவது சண்டை சச்சரவுகள், சட்டவிரோத செயல்கள் மற்றும் மோதல் போக்குகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட வேண்டும். இங்கு தொடங்கும் சம்பவங்கள் தான் பள்ளிவரின் நீடிக்கிறது. எனவே சிறிய அளவிலான பள்ளி மாணவர்கள் பிரச்சனையின் போதும் காவல்துறைக்கு புகாரளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.