்

Advertisment

தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர், தியாகராயநகர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது. சட்டமன்றத் தொகுதி காலியாக இருந்தால் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் அதாவது 2021இல் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா என்ற கேள்வி எழுந்தது. கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால் மூன்று தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவது குறித்து தற்போதைக்கு தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், செப்டம்பர் 7ஆம் தேதி வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே செப்டம்பருக்குப் பிறகு தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் அடுத்த 6 மாதத்தில் நடத்தப்பட வாய்ப்பிருப்பதால் தமிழகத்தில் காலியாக இருக்கும் மூன்று தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்தப்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவாக உள்ளதாகத் தெரிகிறது.