Advertisment

‘விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது’ - உயர்நீதிமன்ற மதுரை கிளை

nn

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்ட பத்திகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisment

இடைக்காலத்தடையை நீக்குமாறுதமிழக அரசு முன்பு வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்,நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதுஎனத்தெரிவித்தது.தனிநபர் குற்றச்சாட்டு அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை எனத்தெரிவித்த நீதிபதிகள், விசாரணைக்காக அழைத்து மனுதாரர் மீது குற்றம் சாட்டுவது எப்படி? எனக் கேள்வி எழுப்பி இடைக்காலத் தடையை நீக்க மறுப்பு தெரிவித்தனர்.

Advertisment

highcourt admk Vijayapaskar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe