Advertisment

"8 மணி நேர வேலை ஒப்பந்தத்தை மாற்றாதே" -என்.எல்.சி.யில் போராட்டம்! 

உலகம் முழுக்க 8 மணி நேர வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடைபெற்ற போராட்டத்தின் அடையாளமாக மே-முதல்நாள் (மே - 01) மேதினம் உழைப்பாளர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசு 8 மணி நேர வேலை திட்டத்தை ரத்து செய்து 12 மணி நேர வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது எனத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளளனர். தொழிலாளர்கள் தியாகம் செய்து பெற்ற உரிமையை முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்ற நினைக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வியாழக்கிழமை நாடு தழுவிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

Advertisment

அதன்படி கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் இரண்டாம் சுரங்க வாயில் அருகே தொழிலாளர் நலச் சட்டங்களை நிறுத்தி வைப்பது போன்ற அராஜக நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று காலை சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச. சங்கங்களின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

அப்போது மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து "தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்காதே" "8 மணி நேர வேலை சட்டத்தை மாற்றாதே" என முழுக்கங்கள் எழுப்பினர்.அதேபோல் அனைத்துச் சுரங்கங்கள் உள்ளிட்ட தொழிலக பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

workers Neyveli nlc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe