நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 13-05-2020 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்ததில், தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனும் செய்தியறிந்து பெரும் மனவேதனையடைந்தேன்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
அத்தொழிலாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கேற்கிறேன். மேலும், 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்று வரும் செய்திகள் பெருங்கவலையைத் தருகின்றன.
இவ்விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 இலட்ச ரூபாயும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இனியாவது தொழிலாளர்களின் உயிர்ப்பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறப்பட்டுள்ளது.