Advertisment

என்.எல்.சி. விபத்தில் 13 பேர் பலி! தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

neyveli

கடலூர் மாவட்டம்,நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் கடந்த 01-ஆம் தேதி 5-ஆவது அலகிலுள்ள கொதிகலன்வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பேர் தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அப்பலல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

Advertisment

அவர்களில் நெய்வேலி நகரியம் 7-ஆவது வட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்ற துணை தலைமை பொறியாளராக பணியாற்றி வந்தவர் 02.07.2020 அன்றும்,இன்ட்கோசெர்வ் தொழிலாளி செல்வராஜ் என்பவரும், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன் என்பவரும் நேற்று முன்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும்நிரந்தர தொழிலாளி வைத்தியநாதன், இளநிலை பொறியாளர் ஜோதி ராமலிங்கம் என்பவரும், இன்ட்கோசெர்வ் தொழிலாளி தொப்புளிக்குப்பம் இளங்கோவன் என்பவரும் நேற்று(06.07.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Advertisment

இந்நிலையில் நெய்வேலி நகரியம் வட்டம் 29-ஐ சேர்ந்த இன்ட்கோசர்வ் தொழிலாளி ஆனந்தபத்பநாபன் இன்று(07.07.2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து என்.எல்.சி.கொதிகலன் வெடித்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே என்.எல்.சி. விபத்து தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தொழிலாளர் நல ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி.தலைமை மேலாண் இயக்குனருக்கும்தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

incident NLC BOILER Neyveli nlc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe