Advertisment

என்.எல்.சியில் மீண்டும் விபத்து... தொழிலாளர் உயிரிழப்பு! 

NLC Neyveli Accident

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் நேற்றிரவு இரண்டாவது ஷிப்ட் பணிக்காக சென்ற இன்கோசர்வ் தொழிலாளி சக்திவேல் என்பவர் நிலக்கரி எடுத்து செல்லும் கன்வேயர் பெல்ட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது கன்வேயர் பெல்ட் மூலமாக இழுத்து செல்லப்பட்ட சக்திவேல் நிலக்கரி அரைக்கும் இயந்திரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து அறிந்த சக தொழிலாளர்கள் என்.எல்.சி. அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கன்வேயர் பெல்ட்டில் சிக்கிய தொழிலாளி சக்திவேலின் உடலை மீட்டு என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து என்.எல்.சி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

ஏற்கனவே இரண்டாவது அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட பாய்லர் விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பகுதியில் தொழிலாளி இறந்துள்ளது தொழிலாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

accident Neyveli NLC INCIDENT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe