Advertisment

என்.எல்.சி. விவகாரம்; கடலூர் ஆட்சியர் விளக்கம்

nlc issue Description of Cuddalore Collector

Advertisment

என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் மேல்வளையமாதேவி கிராமத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு கால்வாய் வெட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை 20க்கும் மேற்பட்ட ராட்சத மண் வெட்டும் வாகனங்கள் மூலம் அழித்துக் கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர்.

என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் போது வழங்கப்பட்ட இழப்பீட்டில் ஏராளமான குளறுபடி நடந்துள்ளதாகவும், அறுவடைக்குத்தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் டிஐஜி ஜியாவுல் ஷேக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

என்.எல்.சி. நிறுவனத்தின் இந்தச் செயலைக் கண்டித்துப் பாமகவினர் சார்பில்100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்றனர்.

Advertisment

nlc issue Description of Cuddalore Collector

இந்நிலையில் என்.எல்.சி. விவகாரம் குறித்துக் கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம். இருப்பினும் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இருப்பினும் அதற்குண்டான இழப்பீட்டையும் வழங்குவோம் என விவசாயிகளுக்குத்தெரிவித்துள்ளோம். வேளாண்மைத்துறை அமைச்சர் நேற்று என்.எல்.சி நிறுவன மேலாண் இயக்குநரை நேரடியாகச் சந்தித்து ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள இழப்பீடு குறைவாக உள்ளது, எனவே அதனை உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அதற்கான இழப்பீட்டையும் அதிகரித்து அறிவித்துள்ளோம். சுமார் 264 ஹெக்டேர் நிலத்திற்கு அதிகமான கருணைத்தொகைவழங்குவதற்கான அறிவிப்பையும் வழங்கியுள்ளோம்.” எனத் தெரிவித்தார்.

Cuddalore nlc
இதையும் படியுங்கள்
Subscribe