Skip to main content

என்.எல்.சி. நிறுவனத்தின் செக்யூரிட்டி ஊழியர்கள் இரண்டாவது நாளாக போராட்டம்! 

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

N.L.C. The company's security employees are on strike for the second day!

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கடந்த 2018- ஆம் ஆண்டு MSS என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் 42 பாதுகாப்பு ஊழியர்கள் பாதுகாப்பு பணிக்காக பணியமர்த்தபட்டனர். 

 

இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகம், MSS நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாக கூறி, அந்நிறுவனத்தின் மூலம் பாதுகாப்புப் பணியில் இருந்த ஊழியர்கள் பணிக்கு வர வேண்டாம் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வந்த பாதுகாப்பு ஊழியர்களின்  வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக் குறியாகி விடும் என்றும், தங்களுக்கு மீண்டும் பாதுகாப்பு ஊழியர்களாக பணி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து என்.எல்.சி நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலகத்தை நேற்று காலை (27/09/2022) முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

N.L.C. The company's security employees are on strike for the second day!

ஆனால் என்.எல்.சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், செக்யூரிட்டி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாததால், இரண்டாவது நாளாக பாதுகாப்பு தலைமை அலுவலகத்தைமுற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  மீண்டும் தங்களுக்கு செக்யூரிட்டி பணி வழங்கும் வரை தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

என்எல்சியில் கன்வேயர் பெல்ட் எரிந்து விபத்து

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
 Conveyor belt fire accident at NLC

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2வது சுரங்கத்தில் நிலக்கரியை மேலே கொண்டு வர பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து தீயணைப்புதுறை வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள 2வது சுரங்கத்தில் பெரிய அளவிலான இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, மின்சாரம் தயாரிப்பதற்காக கன்வேயர் பெல்ட் மூலம் மேலே கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டின் ஓட்டு தலை (drivehead) பகுதியில் நேற்று மாலை  திடீரெ தீப்பிடித்தது.

இதனால் கன்வேயர் பெல்ட் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.  இந்த தீ விபத்தினால் 2 வது சுரங்கம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து என்எல்சி இந்தியா நிறுவன உயர் அதிகாரிகள் தீயணைப்பு த்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்பு, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை. கன்வேயர் பெல்ட் மற்றும் ஓட்டு தலை (drivehead) பகுதி உராய்வின் காரணமாகவோ அல்லது மின் கசிவு காரணமாகவோ தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Next Story

பணிச்சுமை காரணமாக டான்சி நிறுவன ஊழியர் எடுத்த விபரீத முடிவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

tansi company employee  lost their life due to workload

 

ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி (53). இவரது மனைவி ராதா (48). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். ரங்கசாமி கோவையில் உள்ள தமிழ்நாடு அரசின் டான்சி நிறுவனத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார்.

 

கடந்த சில மாதங்களாகவே தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாக ரங்கசாமி தனது மனைவியிடம் கூறி புலம்பி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(29.11.2023) காலையில் ரங்கசாமி பணிக்குச் சென்றார். மனைவி ராதா அவர்களது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். மீண்டும் மாலையில் ராதா வீட்டுக்கு வந்தபோது வீடு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்திருக்கிறது. ரங்கசாமியின் செல்போனுக்கு அழைத்தபோது அவர் போனை எடுக்கவில்லை. 

 

இதையடுத்து சந்தேகமடைந்த ராதா, அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்குள்ள குளியல் அறையில் நைலான் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் ரங்கசாமி இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ரங்கசாமி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். டான்சி நிறுவனத்தின் உயர் அதிகாரி செய்த தொந்தரவால்தான் ரங்கசாமி தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.