n

Advertisment

என்எல்சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில் 40 கிராமங்களிலுள்ள 12,125 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்.எல்.சி நிர்வாகம் மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

n

இந்நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், தர்மநல்லூரில் 40 கிராம மக்கள், விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் ஒன்று கூடி மத்திய, மாநில அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது என்.எல்.சி நிறுவனம் முதல் இரண்டு சுரங்கத்திற்காக, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கே உரிய இழப்பீடும், வேலையும் வழங்காத போது மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் முலம் நிலம் கையப்படுத்த முயற்சிப்பதை கண்டித்தும், மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசுக்கு, துணை போகும் மாநில அரசை கண்டித்தும், என்.எல்.சி நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பொருட்படுத்தாமல் பேசிய தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

n

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, " என்.எல்.சி நிறுவனம் வளமான பகுதியை கையகப்படுத்துவது கண்டிக்கதக்கது. உயிரே போனாலும் ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விட மாட்டோம்" என்றார். மேலும் மத்திய அரசு விவசாய நிலங்களை அழித்து , கார்ப்பரேட் நிறுவனத்தின் உதவியுடன் மரபணு விதையை கொண்டு வந்து, பல்வேறு நோய்களை உருவாக்கி விவசாயிகளை அழிக்க நினைக்கிறது.

Advertisment

வட மாநிலங்களில் நிலக்கரி சுரங்கங்கள் வளமில்லாத பகுதிகளில் இயங்கி வருகிறது. ஆனால் மத்திய அரசானது தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி சுரங்கம் அமைப்பதை ஒரு போதும் விட மாட்டோம்" என்று எச்சரிக்கை விடுத்ததுடன்

"தமிழகத்தில் மீத்தேன் , ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் என பல்வேறு பிரச்சினைகளில் பொதுமக்கள் தீவிரமாக போரடி வருவது போல், என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். ஆதலால் 40 கிராமங்களிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுக்க விட மாட்டோம்" என்று ஆவேசத்துடன் கூறினார்.