Advertisment

 என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு - விவசாயிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்! 

j

Advertisment

என்.எல்.சியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

jo

தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டித்தும், என்.எல்.சியை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது என்.எல்.சி நிறுவனம் முதல் இரண்டு சுரங்கத்திற்காக, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கே உரிய இழப்பீடு வழங்காத போது, மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்த முயற்சிப்பது கண்டித்தும், மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசிடம் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு வலியுறுத்தப்பட்டது.

nlc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe