ADVERTISEMENT

கரையைத் தொட்ட 'நிவர்'... அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை!

05:39 PM Nov 25, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சென்னையில் இன்று இரவு 7 மணியிலிருந்து மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புயல், கனமழை சூழலுக்கு ஏற்ப மெட்ரோ ரயிலை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதேபோல் புதுச்சேரி காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி தீவிரப் புயலாக மாறிய 'நிவர்'-ன் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தின் கரையைத் தொட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கன மழை பொழிந்து வருகிறது. இன்னும் 6 மணி நேரத்தில் புயல் கரையைத் தொடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT