Nivar' touches the shore in Cuddalore ... Heavy rain with thunder for 3 hours ...

'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சென்னையில் இன்று இரவு 7மணியிலிருந்துமெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

புயல், கனமழை சூழலுக்கு ஏற்ப மெட்ரோ ரயிலை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல்,தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், அதேபோல் புதுச்சேரி காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதி தீவிரப் புயலாக மாறிய 'நிவர்'-ன்வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தின் கரையைத் தொட்ட நிலையில், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கன மழை பொழிந்து வருகிறது. இன்னும் 6 மணி நேரத்தில் புயல் கரையைத் தொடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக, சென்னையில் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும்எதிர்பார்க்கப்படுகிறது.