ப

Advertisment

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 25- ஆம் தேதி மதியம் மகாபலிபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் இன்று முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சி துறை, மின்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அந்தெந்த அமைச்சர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் வழிமுறைகளை வழங்கினார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, "யாரும் இந்த புயலுக்கு அச்சப்பட தேவையில்லை, கஜா புயலை விட நிவர் புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மீனவர்கள் யாரும் கடலுக்கு போக வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலில் இருப்பவர்களும் கரைக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.