Advertisment

'நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் இன்று நண்பகல் முதல் வழக்கம்போல் இயங்கும்'!

nivar cyclone seven districts bus service resume tn govt order

ஏழு மாவட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவைஇன்று (26/11/2020) நண்பகல் முதல் மீண்டும் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 24- ஆம் தேதி மதியம் 01.00 மணி முதல் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புயல் 25/11/2020 அன்று இரவு 11.00 மணியளவில் மரக்காணம்- புதுச்சேரி இடையில் கரையைக் கடந்து விட்டதால், மேற்கூறிய மாவட்டங்களில் இன்று (26/11/2020) நண்பகல் 12.00 மணி முதல் வழக்கம்போல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

இதனிடையே, இன்று (26/11/2020) மதியம் 12.00 மணி முதல் விடுமுறைக் கால அட்டவணைப்படி, மீண்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

bus service metro trains nivar cyclone tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe