Advertisment

கடல் சீற்றத்தில் கரை ஒதுங்கிய கடல் மட்டிகள்...!

nivar cyclone Oyster at chidambaram sea

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, சி.புதுப்பேட்டை உள்ளிட்ட கடல் பகுதியில் நிவர் புயலையொட்டி கடல் சீற்றம் புதன்கிழமை அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கடலூர் பகுதியில் புயல் கரையை கடக்கும் என்றிருந்த நிலையில் திசை மாறி மரக்காணம் பகுதியில் புயல் கரையை கடந்தது.

Advertisment

இருப்பினும், சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதியில் மிக கனமழை பெய்தது. பரங்கிப்பேட்டை பகுதியில் மட்டும் 8 மணிநேரத்தில் 9 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், சி.புதுப்பேட்டை பகுதிக்குட்பட்ட கடற்கரைப்பகுதியில் கடல் மட்டிகள் கடல் சீற்றத்தால் அதிகளவு குவிந்து இருந்தது.

Advertisment

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாக்குப்பை உள்ளிட்ட பைகளில் அள்ளிச்சென்றனர். மீனவர்கள் மீன்பிடிக்க கடந்த 5 நாட்களாக செல்லாத நிலையில் தற்போது கடலில் கடல் மட்டிகள் கிடைத்திருப்பதை கண்டு மீனவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல்மட்டிகளை கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கூட்டம் கூட்டமாக வந்து அள்ளி சென்றனர்.

nivar cyclone Chidambaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe