Skip to main content

புயலாக வலுவிழந்தது 'நிவர்'!- வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

nivar cyclone meteorological department rains peoples

"அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடந்த 'நிவர்', புயலாக வலுவிழந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக 'நிவர்' மேலும் வலுவிழக்கும். புதுச்சேரிக்கு 85 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 95 கி.மீ. தொலைவிலும் 'நிவர்' புயல் மையம் கொண்டுள்ளது. நிலப்பரப்பு வழியாக நகரும் 'நிவர்', அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். நிலப்பரப்பு வழியாக உள்ள 'நிவர்', திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் உள்ளது." இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை 8.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வடகிழக்கு பருவமழை... நாம் செய்ய வேண்டியது என்ன? 

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

Northeast Monsoon has started... What should we do?

 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இப்பருவநிலைக்கு எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

 

வடகிழக்கு பருவமழை தமிழகத்தைக் குளிர்வித்து வரும் நிலையில், மழைக்கால நோய்கள் குறித்த விழிப்புணர்வும் அவசியமாகிறது. குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு மழைக்காலங்களில் நிலவும் குளிர்ச்சியான சூழலினால் மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. 

 

குளிர்ச்சியான சூழலால் மூச்சுப் பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுக் குழாய் சுருங்கி, மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காலை நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல், தங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 

 

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்து, சுற்றுச்சூழலைச் சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, மருத்துவர்களின் அறிவுரையை முறையாகப் பின்பற்றி வந்தால், பருவமழைக்கான நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


 

Next Story

டெல்லியில் பலத்த சூறைக்காற்றுடன் பொழிந்த பலத்த மழை! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Heavy rains with thunderstorms in Delhi!

 

டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்ததன் காரணமாக, 40- க்கும் அதிகமான விமானங்கள் தாமதமடைந்துள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில், மணிக்கு 60 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டு, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப, அதிகாலை 03.00 மணி முதல் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பொழிந்தது. கண்டோன்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டனர். 

 

Heavy rains with thunderstorms in Delhi!

 

அந்த பகுதிகளிலும் மழை நீர் தேங்கியிருந்ததால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 40- க்கு அதிகமான விமானங்கள், தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் தரையிறங்க வேண்டிய 18 விமானங்கள் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இன்று மாலையும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.