NIVAR CYCLONE HEAVY RAINS PUDUCHERRY

Advertisment

புதுச்சேரிக்கு வடக்கே 'நிவர்' புயல், அதி தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில், கரையைக் கடக்கத் தொடங்கியது புயல். அதேபோல் சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் அருகே கரையைக் கடந்து வருகிறது 'நிவர்' புயல். புதுச்சேரி வடக்கே 15 கிலோமீட்டர் வேகத்தில் தற்போது கடந்து வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. 'நிவர்' புயலின் மையப்பகுதி கரையைக் கடந்து வரும் நிலையில், புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதியில் அதீத கனமழை பெய்து வருகிறது. 'நிவர்' புயல் கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், காஞ்சிபுரம் நகரம் முழுதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பிறகு பாதிப்பில்லாத பகுதியில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

புதுச்சேரிக்கு அருகே மூன்று மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.