nivar cyclone heavy rains chennai municipality commissioner press meet

Advertisment

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "சென்னைக்கு கிடைக்க வேண்டிய 80 செ.மீ., வடகிழக்கு பருவமழையில் இதுவரை 55 செ.மீ. மழை கிடைத்துள்ளது. 'நிவர்' புயல் காரணமாக சென்னையில் 36 மணி நேரத்தில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. 2015- ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தில் தண்ணீர் தேங்கியதாக 1,000 புகார்கள் வந்த நிலையில் இப்பொது 58 புகார்கள் தான் வந்தது. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதால் இயல்பு நிலை திரும்பியது.

சென்னையில் வேளச்சேரி, ராம்நகர், புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றப்படும். கரோனா பாதிப்பு குறைந்து விட்டது என்பதற்காக சென்னையில் பரிசோதனைகளைக் குறைக்கவில்லை. சென்னையில் அதே அளவில்தான் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன"என தெரிவித்துள்ளார்.