Advertisment

'சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை' -மாநகராட்சி ஆணையர் தகவல்

nivar cyclone chennai corporation commissioner

Advertisment

தாழ்வான பகுதிகளைத் தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை. பருவமழை தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை; நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. 200 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், 600 மோட்டார் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பகுதிகளில் உள்ள அடைப்புகளை சீர் செய்து தண்ணீர் வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

'நிவர்' புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். 044-25384530, 044-25384540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

chennai corporation commissioner heavy rain Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe