நித்யானந்தாவிற்கு கைலாச நாட்டில் மாமன்னர்-மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டி மருதிருவரின் மக்கள் களம் மற்றும் மருது சித்தர்கள் ஆன்மீக சபை சார்பாக நித்யானந்தாவிற்கு கடிதம் மற்றும் வால் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகரில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மற்றும் நடிகர்களுக்கு வால் போஸ்டர்கள் அடித்து வந்த சூழ்நிலையில் தற்சமயம் நித்தியானந்தாவிற்கு கடிதத்தின் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் கைலாசா நாட்டில் மாமன்னர்-மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டி மருதிருவரின் மக்கள் களம் மற்றும் மருது சகோதரர்கள் ஆன்மிக சபை சார்பாக மதுரை மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் நித்யானந்தாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போஸ்டரில் சிவகங்கையில் ஆன்மீக ஆட்சி செய்த ஆன்மீக கொடைவள்ளல் மாமன்னர்-மருது சித்தர்களுக்கு 219 அரசு மற்றும் ஆன்மிக திருவிழா நடைபெற உள்ளது. இதனை அடுத்து நித்யானந்தாவுக்கு தமிழ் சமூகத்தின் வேண்டுகோள் கைலாச நாட்டில் மாமன்னர்-மருது சித்தர்களுக்கு நினைவாலயம் அமைக்க அனுமதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.