Advertisment

தமிழ்நாட்டுக்கே இனி வரமாட்டேன்... நித்தியானந்தாவிற்கு பயத்தை ஏற்படுத்திய சம்பவம்... விரக்தியில் நித்தி!

தமிழ் நாட்டுக்கே இனி வரமாட்டேன் என்று நித்தியானந்தா விரக்தியான குரலில் பேசிய வாட்ஸ்ஆப் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, மேற்கிந்தியத் தீவுக்கூட்டத்தில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா, அப்படியே அமைதியாகத் தன் மீது காலத்தையும் பெண் சீடர்கள் புடை சூழ கழித்துவிட வேண்டும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பிடதி மற்றும் குஜராத் வழக்குகள், அவரே எதிர்பார்க்காத அளவுக்கு வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

Advertisment

nithy

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இவரைப் போலவே பர்கினா பாசோ என்கிற நாட்டில் போலி பெயரில் போலி பாஸ்போர்ட்டை வாங்கி விட்டுத் தப்பி ஓடிய மங்களூரைச் சேர்ந்த நிழல் உலக தாதா ரவி பூஜாரியை, இண்டர்போல் போலீஸின் உதவியோடு கர்நாடகப் போலீஸ் அதிரடியாக மடக்கிக் கைது செய்துள்ளனர். கொலை உள்பட 200 கேஸில் சம்பந்தப்பட்ட பூஜாரி மாட்டியதும் நித்தியானந்தாவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் தன்னோட மரணம், சொத்து பற்றியெல்லாம் அந்த வீடியோவில் விரக்தியாக பேசியிருக்கிறார் நித்தியானந்தா என்கின்றனர். அதே போல் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தோன்றிய நித்தியானந்தா, 'கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இனிமேல் எனக்கும் தமிழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை, என் வாழ்நாள் முழுவதும் நான் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்தது குறிப்படத்தக்கது.

case issues nithiyandha politics
இதையும் படியுங்கள்
Subscribe