Skip to main content

'குழந்தைகளை துன்புறுத்துகிறார்' நித்யானந்தா மீது முன்னாள் சிஷ்யை புகார்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019


பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி என்ற பெண் நித்யானந்தா ஆசிரமத்தில் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார். அவர் தற்போது நித்யானந்தா மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசியுள்ள சாரா ஸ்டீபனி லாண்ட்ரி, " நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் வெளியேறிவிட்டேன். அங்கு நடந்த சில விஷயங்கள்தான் என்னை ஆசிரமத்திலிருந்து வெளியில் வரத் தூண்டியது. நான் அங்கு தங்கியிருந்த அனைத்து நாள்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன். ஆனால் அவை அனைத்தும் பொய்கள் என்று தற்போது நான் அறிந்துகொண்டேன்.
 

jg



கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் நான் திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு ஒரு ரகசிய பணிக்காக அனுப்பப்பட்டேன். அந்த ஆசிரமத்தில் பல சிறுவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். அவர்களுக்குச் சந்திர மந்திரத்துடன் தங்களை இணைப்பது, மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கான பயிற்சி, ஒருவர் உடலில் இருக்கும் நோய்களைக் கண்டுபிடிப்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. இதற்காக நான் திருவனந்தபுரம் ஆசிரமத்தில் குருகுல ஆச்சார்யாவாகச் சென்றிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் கணக்குகளை ஆரம்பித்து அதில் அவர்களைச் செயல்பட வைக்க வேண்டும் என்ற வேலை எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்காக தினமும் அந்தச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகத்தொடங்கினர்.
 

 

hu



ஒரு நாள் இரவு நான் என் அறையில் இருக்கும்போது இரண்டு சிறுவர்கள் என்னை வந்து சந்தித்தனர். என்னைப் பார்த்ததும் அவர்கள் அழத் தொடங்கிவிட்டனர். அப்போது அவர்கள்தான் என்னிடம் நித்யானந்தா செய்வது அனைத்தும் பொய் என்று கூறினார்கள். மேலும், ஆசிரமத்தில் உள்ளவர்களால் நாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம், கழிவறைக்குச் செல்லக்கூட எங்களுக்கு அனுமதி இல்லை, நாங்கள் இரும்புக் கம்பிகள் நிறைந்த அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளோம் என்று என்னிடம் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இதைப் பற்றி நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள மூத்த நிர்வாகிகளான ரஞ்சிதாவிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரின் உண்மையான முகம் தெரிந்த அடுத்த சில நாள்களில் நான் அங்கிருந்து கிளம்பி கனடா வந்துவிட்டேன். அந்த குழந்தைகளைக் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும்"  என்று அவர் தெரிவித்தார்.


https://www.youtube.com/watch?v=XsnxFh1orY4



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடர் சர்ச்சையில் பாஸ்கரானந்தா; பழங்கால முருகன் சிலை பறிமுதல்

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

Bhaskarananda in serial controversy; Seizure of ancient Murugan idol

 

கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ஆசிரமத்தை இடித்து விட்டார்கள் எனக் கூறி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார் பாஸ்கரானந்தா. பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், நான் தான் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறினார். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகச் சிலைகள் அதிக அளவில் கடத்தப்படுவதாகவும் வெளிநாடுகளில் அவை அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளது. காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை பாஸ்கரானந்தா சாமியார் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டனர். 

 

3 மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இந்த சோதனையில் 200 கிலோவிற்கும் அதிகமான எடையுடன் 4 அடி உயரம் கொண்ட ஐம்பொன் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலை வைத்திருப்பதற்கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் காவல்துறையினர் அதனைக் கைப்பற்றிச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். 

 

கும்பகோணம் சிறப்பு கோர்ட்டில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் சிலையை ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப் பிரியா சிலையின் தொன்மையினை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதால் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள உலோகச்சிலைகள் பாதுகாப்பு மையத்தில் அந்தச் சிலை ஒப்படைக்கப்பட்டது.

 

 

Next Story

“எனக்கு வாழ்வாதாரம் போச்சு..திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன்” ஆசிரமத்தை இடித்ததாக புகாரளித்த பாஸ்கரானந்தா

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

baskaraanadha cry for his aashrama

 

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கர்ணம்பேட்டை பகுதியில் செல்வக்குமார் என்பவரது இடத்தில் பாஸ்கரானந்தா என்பவர் ஆசிரமம் ஒன்றை கட்டி வருகிறார். வெளியூரில் இருந்த பாஸ்கரானந்தாவிற்கு ஆசிரம கட்டிடம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. 

 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் தனது ஆசிரமம் தரைமட்டமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து பல்லடம் காவல்நிலையத்திற்கு தனது பக்தர்களுடன் சென்று புகாரளித்தார். மேலும் நித்தியானந்தா என நினைத்து என் ஆசிரமத்தை இடித்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த பாஸ்கரானந்தா வாகனங்களில் ஏராளமான பக்தர்களை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட காவல் துறை உயர் அதிகாரி எச்சரித்துள்ளார். அவரிடம் பேசிய பாஸ்கரானந்தா, “ஐயா நான் நாலு நாளா சாப்பிடலங்கையா. நான் போய் பிச்சை எடுக்கிறதா. திருவோடு வாங்கி கொடுங்க பிச்சை எடுக்குறேன். நான் இததான் கேட்க முடியும்.

 

எனக்கு வாழ்வாதாரம் போச்சு. என் மனநிலைல இருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்க. என் உயிர் போறதுக்குள்ள நீங்க காப்பாத்துறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. நான் காவல்துறைய நம்பி வந்துருக்கேன். தயவு செஞ்சி ஆன்மீகத்துல இருக்குறவன ரோட்ல நின்னு அழுக வைக்காதீங்க” எனக் அழுதுகொண்டே கூறும் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.