ADVERTISEMENT

மதுரை சித்திரை திருவிழாவில் நித்தியானந்தா! 

09:55 AM Apr 08, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சி அம்மனும், சுவாமியும் கற்பகவிருட்சம், பூதவாகனம், அன்னவாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சியளித்து வருகிறது.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள நித்தியானந்தம் ஆசிரமத்தில் உள்ள அவரது சீடர்கள் நித்தியானந்தா கைலாச நாட்டில் இருந்தவாறே சித்திரை திருவிழாவை காண்பதற்காக நேரலை வசதியை ஏற்படுத்தினர். மேலும், தான் சித்திரை திருவிழாவை காண்பதனை நேரலையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்படியும், மேலும் பக்தர்களுக்கு அறுசுவை பிரசாதங்களை வழங்கவும் நித்தியானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி பிரத்தியேக காட்சிப் பதிவுகள் நித்தியானந்தாவுக்கு அனுப்பட்டும், ஆசிரமம் சார்பாக அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டும் பட்டாடைகளும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் ஆசிரமம் சார்பில் அறுசுவை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதனை ஏராளமான பெண்கள் கூட்டத்தில் முந்தியடித்துக்கொண்டு வாங்கிச் சென்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT