ADVERTISEMENT

நிர்மலாதேவியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

12:50 AM Aug 24, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


நிர்மலா தேவியிடம் காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்திருந்தார், இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த, நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன் ஆகியோர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கள் கிழமை 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT