Skip to main content

கும்மியடித்து பாட்டுப் பாடி பரிசு வென்ற நிர்மலாதேவி! -மகளிர் தின மகிழ்ச்சி!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

‘மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி தற்கொலைக்கு முயற்சித்தார்; பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானார்..’ என்று அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் மீடியாக்களுக்கு பேட்டியளித்துவரும் நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய சிறையில் நடந்த கைதிகளுக்கான  போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றார் நிர்மலாதேவி என சிறைத்துறை வட்டாரத்திலிருந்து தகவல் சொன்னார்கள். 

 

prison

 

பொதுவாக, சிறையிலுள்ள பெண் கைதிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில், மகளிர்தின விழாவைக் கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. அதன்பிரகாரம், நேற்று மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் நடந்த மகளிர் தின விழாவில், சிறை (பெண்) ஊழியர்கள் மற்றும் பெண் கைதிகள் கலந்துகொண்டனர். அப்போது நடந்த போட்டிகளில், பேச்சுப் போட்டி மற்றும் கும்மிப்பாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார் நிர்மலாதேவி. 

 

prison

 

மதுரை சிறையிலுள்ள பெண் கைதிகளிலேயே அதிகம் படித்தவராகவும், கல்லூரி பேராசிரியராகவும் இருந்தவரல்லவா நிர்மலாதேவி! பரிசு வென்றது பெரிய விஷயமே கிடையாது. ஜாமின் கிடைக்காத மன உளைச்சலில் கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக சிறையில் அடைபட்டிருக்கும் அவர்,  மன இறுக்கம் தளர்ந்து போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டதுதான் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; கட்டடத் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
25 years in prison for a construction worker for A 9-year-old girl was misbehaviour in vellore

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு பகுதியை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (39). இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு, அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கடத்தி அருகில் உள்ள மாங்காய் தோட்டத்தில் கட்டிப் போட்டு சுரேஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர், குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார், சுரேஷ்குமாரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கலைப்பொன்னி இந்த வழக்கில் நேற்று (15-03-24) தீர்ப்பளித்தார். அதில், சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபணமானதால், அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத் தவறினால், கூடுதலாக 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

Next Story

உலக மகளிர் தினம்; மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
International Women's Day; Metro Rail Corporation is a new initiative

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சர்வதேச மகளிர் தினத்தன்று, பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த பிரத்யேக மகளிர் உதவி எண் 155370ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

மகளிர் உதவி எண் 155370 என்பது 24 மணி நேரமும் (24/7) பெண்களால் இயக்கப்படும் சேவையாகும். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஏதேனும் இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பெண் பயணிகளுக்கு உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்குவதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் பல சேவைகளை வழங்குகிறது. இதில் அவசரகால பதில் தேவைப்படும் போதெல்லாம் பெண்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்கிறது. தற்போது, இந்த உதவி எண் பி.எஸ்.என்.எல். (BSNL) நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நெட்வொர்க்குகளுடன் செயல்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து பெண் பயணிகளும் மகளிர் உதவி எண் 155370ஐ தங்கள் தொலைபேசியில் சேமித்து, சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது தேவை ஏற்பட்டால் தயங்காமல் அதைப் பயன்படுத்துமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.