style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி, பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இறுதிக்கட்ட குற்றப்பத்திரிக்கை, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரும் இன்று இந்நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய இம்மூவருக்கும் 1360 பக்கங்கள் கொண்ட முழுமையான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. செப்டம்பர் 19-ஆம் தேதி மீண்டும் இவர்களை ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டிருக்கிறது விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">