
பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். கல்லூரி மாணவியரை தவறாக வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலாதேவி மீது குற்றச்சாட்டு எழுந்த பரபரப்பினை அடுத்து அதிகாரி சந்தானம் தலைமையிலான குழுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமைத்திருந்தார்.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக்குழு பல்கலைக்கழக அதிகாரிகள், சிறையில் உள்ள நிர்மலா தேவி ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சந்தானம் தாக்கல் செய்தார்.
நிர்மலாதேவி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சிபிசிஐடி விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி ஜி.எஸ். மணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார். இந்த வழக்கின் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு புலனாய்வு அமைப்பின் விசாரணை முடியாத போதே, அது சரியில்லை என எப்படி கூறமுடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.