கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் பெற்றுள்ள நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு வந்தது.
இந்த வழக்கில் கருப்பசாமி முருகன் ஆகியோர் ஆஜரான நிலையில் நிர்மலா தேவி ஆஜராவதில் விலக்களிக்க கோரி மனு தரப்பட்டது.நீதிமன்றத்தில் நிர்மலாதேவி ஆஜராகாத நிலையில்,வழக்கு 13.6.2019 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் வந்தார் நிர்மலாதேவி.