Skip to main content

“நிர்மலாதேவி! சில உண்மைகளை நீங்கள் சொல்வதில்லை! எந்த அமைச்சர்?” -’செஞ்சிருவோம்’ என மிரட்டுவதாக வழக்கறிஞரிடம் பிதற்றல்!

Published on 17/11/2019 | Edited on 18/11/2019

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்திருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி நாளை (18-11-2019) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய நிலையில், இன்று திடீரென்று ஒரு ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது.
 

nirmaladevi audio

 

அந்த ஆடியோவில் பதிவாகியிருக்கும் நிர்மலாதேவி – வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், இருவருக்குமிடையே நடந்த  உரையாடல் இது -  
“அண்ணா.. நான் நிர்மலா பேசுறேண்ணா..”
“சொல்லுங்க..”
“அண்ணா.. எனக்கு இந்த வீட்ல இருக்கிறதுக்கு பயமா இருக்குண்ணா.. என்ன நடக்குதுன்னே சொல்ல முடியல. கொஞ்சம் விவரமா பேசணும். பேசலாமா உங்ககூட.
“பேசுங்க..”
“இப்ப வாட்ஸ்-ஆப்ல சில போட்டோஸ் அனுப்பி வச்சிருக்கேண்ணா..”
”என்னோட வாட்ஸ்-ஆப்லயா?”
“ஆமா.. நீங்க பாருங்க.. நான் பேசி முடிச்சதுக்கப்புறம் பாருங்க..”
“சரி..”
“ஏன்னா.. நான் இப்ப தனியா இருக்கேன்னு சொல்லிட்டு, எல்லாரும் நைட் நேரம் வந்து, கொஞ்சம் பயமுறுத்துற மாதிரி தெரியுது. கதவ திறக்க முயற்சி பண்ணுற மாதிரி தெரியுது.. அதே மாதிரி கோர்ட்டுக்கு கேஸ் அட்டென்ட் பண்ணவிடாம செய்யறதுக்காக, நெறய த்ரெட்டன்ஸ் வருதுண்ணா.. கோர்ட்ல அட்டென்ட் பண்ணுனின்னா ஆசிட் ஊத்திருவேன்னு சொல்லுறாங்க.. எனக்கு பயமா இருக்குண்ணா..எனக்கு பயமா இருக்கு.. கோர்ட்டுக்கு வர்றதுக்கு.. அதனாலதான்.. லாஸ்ட் டைம் கூட என்னால கோர்ட்டுக்கு வர முடியாம இருந்தது.”
“என்ன காரணம் உங்கள தொடர்ந்து மிரட்டுறதுக்கு? யாரு மிரட்டுறா?”
“ஏதோ.. அமைச்சர் அதுஇதுன்னு சொல்லுறாங்கண்ணா.. என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல. ஏன்னா.. கும்பலா வெளிய போறப்ப.. அப்படி சொல்லுறாங்க.. நாலு பேரு பார்க்க முடியாத அளவுக்கு அந்தமாதிரி சொல்லுறாங்க.”
“இப்ப நீங்களே வீட்ல உள்ள.. உங்க வீட்ல உள்ள பொருளையெல்லாம் வெளிய எடுத்து போட்டதாக அன்னைக்கு ஒரு பத்திரிக்கைல செய்தி வந்தது.”

 

nirmaladevi audio

 

“ஆமா.. மனநலம் ரொம்ப மோசமா போய்க்கிட்டிருக்கு. இந்த மாதிரி வீட்ல இருக்கவே ரொம்ப பயமா இருக்கு.”
“இரவு நேரம் வர்றாங்கன்னா.. யாரும் தெருவுல பார்க்கிறாங்களா? அவங்க அன்டைம்ல வர்றாங்களா?”
“தெரியலண்ணா.. எப்படி வர்றாங்க? எந்த நேரத்துல வர்றாங்கன்னு.. நான் நேத்து உங்கள சந்திச்சிட்டு வந்தேன். அப்ப வந்து கதவ திறந்து பார்த்தா.. பூட்டுல வந்து இது பண்ணிருப்பாங்க போல. அந்த பெயிண்ட் உதிர்ந்திருக்கு. அதேமாதிரி.. இ.பி. வெளிலதான் இருக்கு. இ.பி. ரீடிங் எடுக்கிற மாதிரி.. அந்த டோர் ஃபுல்லா ஓபனாயிருந்துச்சு. ரீடிங் எடுக்க வந்தாங்களா? என்னன்னு தெரியல. சரி.. அப்படி பாசிடிவா நினைச்சாலுமே, கதவு கீழே வீட்ல வந்து.. கதவை திறக்கலாம்னு பார்த்தா..  சாவி போடுற அந்த லாக்குக்கு மேல லேசா உடைஞ்சிருக்கு. கதவை உடைக்க முயற்சி பண்ணுறாங்களா? என்ன ஏதுன்னு ஒண்ணும் தெரியல. நான் ஏற்கனவே உள்ள இருந்த வீடு தெஃப்ட் போன சமயத்துல, கதவை நெம்பி  இது பண்ணுனத அண்ணன் சரி பண்ணி வச்சிருந்தாங்க. இத்தனை நாள் நான் ரெகுலரா யூஸ் பண்ணுற அந்த தழும்பு இல்ல. அந்த விரிசல் இல்ல கதவுல. நேத்து பார்த்தா அந்த விரிசல் இருக்கு. ஏது நடக்குது.. அதுக்காக நான் வீட்லயே இருக்க மாட்டேங்கிறேன். அத்தியாவசிய தேவைகளுக்கு நான் வெளியதான் போக வேண்டியிருக்கு. இருக்கிற நேரம் செய்றாங்களா? இல்லாத நேரம் செய்றாங்களா? எனக்கு ஒண்ணும் தெரியல. இருக்க இருக்க என் வீட்டுக்காரரும் சப்போர்ட் இல்ல.. சொந்தக்காரங்களும் சப்போர்ட் இல்ல. ஃபினான்சியல் சப்போர்ட் இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.”
 

“வழக்குக்கு நீங்க வரக்கூடாதுன்னு அப்படி பர்பஸா பண்ணுறவங்க.. அமைச்சர் பெயரைச் சொல்லுறாங்களா? இரவு நேரங்கள்ல.”
“பேரைச் சொல்லல. யாரு என்னன்னு சொல்லல. நாங்க செஞ்சிருவோம்கிற மாதிரிதான் சொல்லுறாங்க. பேர் என்ன ஏதுன்னு சொல்லல.”
“இரவு வர்றாங்களா?”
 

“இரவு டைம் வந்து கதவ மூடற சத்தம் கேட்குது. ஆனா.. டே டைம்லதான் நான் வெளிய போற வர்ற.. அதாவது காமன் மேன் மாதிரி வந்து சொல்லிட்டு போறமாதிரி இருக்காங்க. நான் திரும்பி என்ன ஏதுன்னு பார்க்க முடியாத மாதிரி.. பார்க்க முடியாத சூழ்நிலைல  இந்தமாதிரி சொல்லிட்டு போறாங்க. யாரு என்ன சொல்லுறாங்க.. ஏது சொல்லுறாங்கன்னு ஐடன்டிஃபை பண்ணி ஆளை அடையாளம் காமிக்க முடியாத அளவுக்கு சொல்லிட்டு போறாங்க. அதனால, எனக்கு என்ன பண்ணுறதுன்னே பயமா இருக்கு. இதுபத்தி நேத்து பேசலாமா, பேசக்கூடாதான்னு தெரியல. ஆனா.. கொஞ்சம் நாம வீட்டுக்குள்ளதான இருக்கோம். பயமில்ல. சாஃப்ட்டா போயிருக்கலாம் அப்படின்னு பார்த்தா.. நேத்து கதவுல அந்தமாதிரி இருந்தவுடனேதான் உங்ககிட்ட பேசலாம்னு..”
“எத்தனை மணிக்கு வந்தாங்க?”
 

nirmaladevi audio

 

“தெரியலண்ணா.. நான் கவனிக்கல.. பார்க்கல.”
“நீங்க இதை புகாரா கொடுக்கலாம்ல..”
“அது எனக்கு தனியா போக பயமா இருக்குண்ணா.. அதனாலதான் உங்ககிட்ட சொல்லிட்டோம்னா.. நீங்க அதுக்குண்டான ஸ்டெப்ஸை எடுத்துருவீங்க. அப்படிங்கிறதுக்காகத்தான் யோசிக்கிறேன்.”
“உங்க மனநிலை உடல்நிலை எப்படியிருக்கு? நாளைக்கு நீதிமன்றத்துக்கு வரமுடியுமா?”
 

“இந்தமாதிரி சொல்லிகிட்டிருக்கிறதுனால என்னால வரமுடியாதுண்ணா..”
“என்ன ஸ்பெசிஃபிக்கா வேர்ட்ஸ் சொல்லுறாங்கம்மா உங்கள பார்த்து? என்ன சொல்லுறாங்க? நீதிமன்றத்துக்கு..”
“கேஸ் அட்டென்ட் பண்ண வேண்டாம். நீங்க போக வேண்டாம். நீங்க போனீங்கன்னா.. போற வர்ற வழியில ஏதாச்சும் செஞ்சிருவோம். உயிருக்கு ஆபத்து. ஆசிட் அடிச்சிருவோம். இந்த மாதிரி சொல்லுறாங்க. எனக்கு பயமா இருக்கு. ஏன்னா கோர்ட்டை மட்டும்தான் நான் நம்பியிருக்கேன்.”
“நீதிமன்றம் உங்கள கைவிடாது. அதைப்பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். இப்ப உங்க உடல்நிலையும் மனநிலையும் எப்படியிருக்கு?”
“ரொம்ப மோசமா இருக்கு. இப்ப வந்து கன்டிநியூஸா முந்தி ஒரு ரொம்ப முடியாத சூழ்நிலைலதான்.. நான் வந்து பால்மர் அண்ணாகிட்ட, வக்கீல் ஜோபு, அவங்க ஃபேமிலி லாயர் அப்ப.. பேசிட்டு அவங்க மூலமாத்தான் சைக்கியாட்டிரிக் ட்ரீட்மென்ட் கண்டிப்பா போனேன். உடனே அவசியம்கிற மாதிரி. இப்ப அதைவிட முக்கியமான ஸ்டேஜ்ல நான் இருக்கேன். இப்ப எனக்கு உடனே ரொம்ப தேவைப்படுது.. இப்ப வெளிய போறப்ப யாராவது எதையாச்சும் பேசினாலே ரொம்ப  பயமா இருக்கு.”
 

“கவலைப்பட வேண்டாம். மனநல மருத்துவமனையில் சேர வேண்டுமா?”
“ஆமா.. ட்ரீட்மெண்ட் கண்டிப்பா அவசியமா இருக்கு.”
“நாளைக்கு வாய்தா வாங்க முயற்சி பண்ணுவோம். நீதித்துறை கவனத்துக்கு கொண்டு வருவோம். நீங்க பயப்படாதீங்க. உங்க உடல் நிலைய மொதல்ல பாருங்க.”
“நீங்களே யாராச்சும் சைக்கியாட்ரிக் ட்ரீட்மெண்ட் கொடுக்கிற.. ஏன்னா இப்ப முந்தி ஒரு தடவ, நான் போனப்ப.. அட்டென்டர் இல்லாம எந்த ஹாஸ்பிடல்லயும் நம்மளோட கேஸ் விஷயமா இருக்கிறதுனால.. அட்மிஷன் கொடுக்க மாட்டேங்கிறாங்க. லாஸ்ட் டைம் கொடுத்ததுக்கே அவங்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க. ஒரு அன்அவாய்டபிள் சிச்சுவேசன்லதான் டிஸ்சார்ஜே பண்ணுனாங்க. நெறய ரிப்போர்ட்டர்ஸ் எல்லாம் போயி தொந்தரவு பண்ணிருக்காங்க. அப்படிங்கிறதுனாலதான் டிஸ்சார்ஜ் பண்ணிருக்காங்க. அதுனாலதான் இப்ப, எந்த ஒரு கிளினிக்குக்கும் தனியா போக பயமா இருக்கு. அட்மிஷன் கேட்கிறதுக்கு ரொம்ப யோசனையா  இருக்கு.”
 

nirmaladevi audio

 

“பத்திரிகையாளர்கள்கிட்ட சொல்லிக்கலாம் உங்க மனநிலையை தெரியும் அவங்களுக்கு ஏற்கனவே.. அதனால, நீங்க மேற்கொண்டு மனநிலை பாதிக்கப்படக்கூடாது. உங்கள பாதுகாக்க வேண்டியது சட்டத்தின் கடமை சரியா? அதனால.. நீங்க மொதல்ல மருத்துவமனையில் சேர்வதற்கான ஏற்பாடு பண்ணுறேன்.”
“சரி..”
“நீங்க வந்து நாளைக்கு வாய்தா வாங்கிடலாம் சரியா? நீங்க உங்க உடல் நிலைய சரிபண்ணுனதுக்கு அப்புறம் இந்த சம்பவங்களை காவல் நிலையத்தில் நீங்க தெளிவா சொல்லுங்க. உங்க கைப்பட எழுதி ஒரு புகார் கொடுங்க.”
“ஹாஸ்பிடலைஸ் பண்ணுறப்ப எனக்கு ஃபினான்சியல் கன்டிஷனும் ரொம்ப மோசமா இருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு கொடுக்கிற மாதிரி.. அதுமாதிரி தெரிஞ்ச டாக்டர்களைப் பார்த்து..”
 

“அது கடனெல்லாம் சொல்ல முடியாது. எப்பேர்ப்பட்ட..”
“கடன் சொல்ல முடியாது. அட்மிஷன் கொடுக்கிற நேரத்துல பேஸிக் அட்மிஷன் சார்ஜஸ் நாம கொடுக்க வேண்டியதிருக்கும் இல்லியா? அதுக்கே இப்ப எனக்கு முடியல.”
“உங்க சூழ்நிலை தெரிஞ்சு அதுக்கு என்னன்னு பார்ப்போம். ஒண்ணும் வருத்தப்படாதீங்க. நீங்க உடனடியா தயாரா இருங்க. உங்கள மருத்துவமனைல சேர்க்க.. அதுக்கான ஏற்பாடு பண்ணுறேன். மிச்ச விஷயங்கள உங்க மனநிலை சரியானதுக்கப்புறம் பார்ப்போம்; பாதுகாப்பு கொடுப்போம் சரியா?”
“சரிங்க..”
 

nirmaladevi audio

 

“உங்களுக்கு மிரட்டல் இருக்கு சிறைல இருந்தாலும் மிரட்டல் இருக்கு. நீதிமன்றத்துக்குப் போனாலும் மிரட்டல் இருக்கு. நீங்களும் சில உண்மைகளை சொல்ல மாட்டேங்கிறீங்க. டாக்டர்கிட்ட வக்கீல்கிட்ட உண்மைய சொன்னாத்தான்.. நாங்க பாதுகாக்க முடியும்.”
“இப்ப நான் உங்ககிட்ட சொல்லுறேன். போலீஸ் ஸ்டேஷன் போகாம.. யாருன்னு தெரியலியே? யாருன்னு பேர் சொல்லாம..”
“இந்த அமைச்சர்ன்னு பேர் சொல்லணும்ல.. சரி, நீங்க உங்க உடல் நிலைய சரி பண்ணுங்க. உடனடியா உங்களுக்கு செய்ய வேண்டிய உதவிய இம்மிடியேட் ரெமடி ஃபர்ஸ் எய்ட் உண்டு. உங்கள மருத்துவர்கிட்ட சேர்க்கப்போறேன் நான். நாளைக்கு நீதிமன்றத்துல பார்த்துக்கலாம்.”
“சரி..”
 

“திரும்பி போன்ல வர்றேன்.”
 

-வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் கைபேசியில் நிர்மலாதேவி பேசியிருக்கும் இந்த ஆடியோவில்,, ஏற்கனவே நிர்மலாதேவி வெளிப்படுத்தியிருந்த பயமே பிரதானமாக உள்ளது.  மிரட்டல்.. மனநலம்.. உடல் நலம்.. சிகிச்சை.. அதற்கான பணம் பற்றியே இருவரும் திரும்பத் திரும்ப பேசுகிறார்கள்.  
ஏற்கனவே சொல்லி வைத்துப் பேசி பதிவு செய்தது போலவே இருக்கிறது இருவரது பேச்சும். இதெல்லாம் நிஜமா? நாடகமா? என்னும் சந்தேகம் இந்த ஆடியோவைக் கேட்கின்ற யாருக்கும் எழாமல் இருக்கமுடியாது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எனக்கு நைட் 10 மணிக்கு நீ வந்து நிக்கணும்' - ஆபாச மிரட்டலால் இளம்பெண் தற்கொலை

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

nn

 

தூத்துக்குடியில் மில் ஒன்றுக்கு வேலைக்குச் சென்ற இளம்பெண் ஓட்டுநரின் ஆபாச போன் கால் மிரட்டல் காரணமாக அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம் சிலுவைப்பட்டி அருகே உள்ள சுனாமி காலனியைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகள் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மதுரா கோட்ஸ் எனும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கும் அதே நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த செல்வம் என்ற நபருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமான செல்வம் அடிக்கடி அப்பெண்ணிடம் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை தன்னுடன் வெளியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் செல்வம் உன்னுடன் வீடியோ கால் பேசும்போது எடுத்து வைத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். கடந்த சில மாதங்களாகவே மிரட்டல் விட்டிருந்த நிலையில் தீபாவளியன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தன்னுடைய மரணத்திற்கு செல்வம் தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு அவருடைய தொலைப்பேசி நம்பரையும் குறிப்பிட்டு வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். தனது மகள் உயிரிழப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி பெற்றோர் கதறி அழுதனர். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் செல்போன் மற்றும் அவர் எழுதி வைத்த கடிதத்தை தாளமுத்து நகர் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். ஆனால் போலீஸார் அந்த நபரை பிடிப்பதில் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படும் நிலையில், இறந்த இளம் பெண்ணின் சகோதரி வேலம்மாள் என்பவர் செல்போன் மூலம் செல்வத்தை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

 

அப்போது போதையில் இருந்த செல்வம், தன்னுடன் பேசுவது மில்லில் வேலை பார்த்து வந்த பெண் என நினைத்து, 'நீ கிளம்பி வர்ற... பத்து மணிக்கு வந்துரு. எதுக்கு நம்பர மாத்திக்கிட்டே இருக்க. எனக்கு நைட் 10 மணிக்கு நீ வந்து நிக்கணும்...' என பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. இந்த தற்கொலைக்கு காரணமான செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து நடவடிக்கை செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அப்பெண்ணின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Next Story

மணல் கொள்ளையரிடம் பணம் கேட்டு கறாராகப் பேசிய போலீஸ்; பரபரப்பைக் கிளப்பிய ஆடியோ 

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

police demanded money from the sand robber and negotiated a deal

 

மணல் கொள்ளையர்களிடம் பணம் கேட்கும் போலீஸின் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர மற்றும் கிராம ,உமராபாத் உள்ளிட்ட  காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட  பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் பாலாற்றில் மணல் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது . இந்நிலையில் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் ஆம்பூர் அடுத்த கட்டவாரபல்லி  பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மணல் கொள்ளையரிடம் பீட் பணம் இன்னும் கொடுக்கவில்லையாமே? ஏன் தரல? உடனே கொண்டு வந்து தா என தொடர்ந்து (மணல் கொள்ளையரிடம்) போன் செய்து பீட் பணம் குறைவாக கொடுத்தால் இன்ஸ்பெக்டர் மொத்த வண்டியையும் நிறுத்தி விடுவார் என தலைமை காவலர் சீனிவாசன் கறாராக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காவல்துறையினர்  மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

 

இதுபோன்று மணல் கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்படும் தலைமை காவலர் மீது துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி ஆல்பட்ர் ஜான் தலைமை காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்