Advertisment

நிர்மலாதேவிக்காக அவரது ரசிகர் ஒரு நிமிட தவம்!

நிர்மலாதேவிக்காக அவரது ரசிகர் அன்பழகன் நீதிமன்ற வளாகத்தில் ஒரு நிமிட தவம் செய்தார்.

Advertisment

an

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு வரும்போதெல்லாம் தவறாமல் நீதிமன்ற வளாகத்தில் ஆஜராகி வருகிறார் உசிலம்பட்டியைச்சேர்ந்த அன்பழகன். இவர்,நிர்மலாதேவி நீதிமன்ற வளாகத்திற்குள் சென்று ஆஜராகிவிட்டு மீண்டும் திரும்பிச்செல்லும் வரை அவரை பார்த்துக்கொண்டே இருப்பார். அங்கே செய்தி சேகரிப்பவர்களிடம், நிர்மலாதேவி வழக்கை பற்றி ஆர்வமாக விசாரித்துக்கொண்டே இருப்பார். அதுபற்றி கேட்டால், தான் நிர்மலாதேவியின் தீவிர ரசிகர் என்று சொல்லுவார்.

Advertisment

இன்றைய வழக்கு விசாரணைக்கு நிர்மலாதேவி ஆஜராகாமல் போகவே, அன்பழகன் அங்கே ஆஜராகி வழக்கம்போலவே செய்துகொண்டிருக்க, அவரை நெருங்கி விசாரித்தபோது, ‘’நான் முன்பு நிர்மலாதேவியின் தீவிர ரசிகர். அவர் மேல் எந்த குற்றமும் இல்லை. அவரைப்பற்றி வரும் செய்திகளை யெல்லாம் பார்க்கும்போது எனக்கு கண்ணீர் வருகிறது. நான் மட்டும் அவருக்கு ரசிகர் கிடையாது. அவரின் மீது அனுதாபம் கொண்டு என்னைப்போல் தமிழகம் முழுவதும் அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை நான் சகோதரி மாதிரி நினைக்கத் தொடங்கிவிட்டேன்’’ என்று கூறினார்.

மேலும், அவர் இல்லாத பட்சத்தில் அவருக்காக அவர் அமர்ந்த இடத்தில் தியானம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து ஒரு நிமிடம் தியானம் செய்தார் அன்பழகன்.

முன்பொருமுறை விசாரணைக்கு ஆஜராக வந்த நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்து தியானம் செய்ததால் இன்று அதேபோல் அன்பழகனும் தியானம் செய்துள்ளார்.

Nirmaladevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe