Advertisment

துணைவேந்தர் ஏற்பாட்டில் மாணவிகளின் டான்ஸ் ப்ரோக்ராம்! -நிர்மலாதேவி வழக்கின் இருண்ட பக்கங்கள்!

பேராசிரியர் நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளைத் தவறான பாதையில் அழைத்த வழக்கு பதிவாகி ஒராண்டு கடந்த நிலையிலும், “இன்னும் வெளிச்சத்துக்கு வராத சங்கதிகள் அனேகம் உண்டு..” என, மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டாரத்தில் சில வில்லங்க விவகாரங்கள் குறித்துப் பேசினார்கள்.

Advertisment

m

“வித்யாசாகர்ராவ் கவர்னராக இருந்தபோது, யுனிவர்சிடி கெஸ்ட் ஹவுஸில் ஒருநாள் தங்கினார். அப்போது ஒருமாதிரி பேச்சு வந்தது. துணைவேந்தராக செல்லதுரை இருந்தபோது பல கூத்துக்களை அரங்கேற்றினார். ஸ்வச் பாரத் குழுவினர் அப்போது மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு நடத்த வந்தனர். அவர்களுக்காக, மகளிர் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளை வைத்து டான்ஸ் ப்ரோக்ராம் நடத்தினார். இதெல்லாம் தேவையில்லாத வேலை என்று அப்போதே விமர்சனம் எழுந்தது.

Advertisment

செல்லதுரை

c

நிர்மலாதேவி விவகாரத்தில் என்ன நடந்தது? தொலைதூர கல்வி மைய இயக்குனர் விஜயதுரையிடம் நிர்மலாதேவி அழைத்துச் செல்லப்பட்டார்.

விஜயதுரை

வ்

அறிமுகமானதும், ‘கெஸ்ட் லெக்சர்’ வேண்டுமென்று கேட்டார். விஜயதுரை வாட்ட சாட்டமாக இருந்ததால், ‘கரெக்ட்’ பண்ணிவிடலாம் என்று கணக்கு போட்டார். அது அப்படியென்றால்.. இது இப்படி. மனிதவள மேம்பாட்டு மைய இயக்குநர் கலைச்செல்வன், நிர்மலாதேவியைத் தொடர்ந்து தனது பிடியிலேயே வைத்திருந்தார்.

கலைச்செல்வன்

க்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் சஸ்பென்ட் செய்யப்பட்டபோது, நிர்மலாதேவிக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேட்டியெல்லாம் கொடுத்தார். நிர்மலாதேவியை அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றவருக்கு போதையில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாது. செல்லதுரை வரைக்கும் பேசியிருக்கிறார். என்னென்னவோ நடந்து தொலைத்தது.

யார்யாரெல்லாம் நெருக்கமான தொடர்பில் இருந்தார்கள் என்பது சிபிசிஐடி போலீசாருக்கு நன்றாகவே தெரியும். முக்கிய அதிகாரிகளைக் கைது செய்தால், சென்னை வரையிலும் கை காட்டுவார்கள். ‘கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையில் சொரிந்தால் என்னாகும்?’ என்பதை அறிந்தே, அவர்களை வழக்கில் சேர்க்க வேண்டாம் என்று சிபிசிஐடி போலீசாருக்கு மேலிடம் உத்தரவிட்டது. அந்த அதிகாரிகளும் வழக்கிலிருந்து தப்பிவிட்டார்கள்.” என்று ‘உச்’ கொட்டினர்.

நிர்மலாதேவி வழக்கில் பல்கலைக்கழக விவகாரங்கள் பலவும் ஆளும் கட்சியினர் ஆசியோடு இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டன!

Nirmala Devi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe