Advertisment

’நான் காமாட்சி அம்மன் பேசுகிறேன்...’- நீதிமன்றத்தில் அருள் வந்தவர் போல் பிதற்றிய  நிர்மலாதேவி

மாணவிகளை தவறான பாதையில் அழைத்துச்சென்ற வழக்கில் கைதாகி சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவ்வழக்கின் விசாரணை இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணைக்கு தாமதமாக வந்தார் நிர்மலாதேவி.

Advertisment

இதுவரை நீதிமன்றத்திற்கு வந்த நிர்மலாதேவிக்கும் இன்று வந்தநிர்மலாதேவிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. கூந்தலை அக்கங்கே வெட்டியிருந்தார்.

Advertisment

n

அதே போல் வழக்கு விசாரணையின் போது அவர், ’’நான் காமாட்சி அம்மன் பேசுகிறேன். எனக்கு காமாட்சியின் அருள் கிடைத்திருக்கிறது. என் குழந்தைகள் எல்லாம செத்து போச்சு. எனக்கு சாட்சி சொல்லியவர்கள் எல்லாம் செத்து போயிட்டார்கள்’’என்று பிதற்றினார். மேலும், ‘’எனக்கு விடுதலை கிடைச்சிடுச்சு. எல்லோரும் பட்டாசு வெடிச்சு கொண்டாடுங்க’’ என்றும் பிதற்றினார்.

நிர்மலாதேவிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பிதற்றுகிறார்? ஏதேனும் மனநிலை பாதிப்பா? என அங்கிருந்தவர்கள் குழம்பிப்போனார்கள்.

விசாரணைக்கு பின்னர், அடுத்த வாய்தா 22ம் தேதி என நீதிபதி அறிவித்த பின்னரும், அங்கிருந்து நகராமல் பிதற்றிக்கொண்டிருந்தார் நிர்மலாதேவி.

அங்கிருந்தவர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியே கொண்டு வந்தனர். நீதிமன்ற வளாக பெஞ்ச் மேல் அமர்ந்து கண்களை மூடி அருள் வாக்கு வந்தவர் போல் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். வழக்கறிஞர் அவரை அழைத்தபோது, நான் பாவா (கணவர்) வந்தால்தான் வருவேன் என்று அங்கிருந்து வராமல் அடம்பிடித்தார். இப்படி செய்தால் ஜாமீன் ரத்து ஆகிவிடும் என்று சொன்னதும், திடீரென்று எழுந்தார். இதுதான் தருணம் என்று அவரை இழுத்துச்சென்று காருக்குள் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அருள் வந்தவர் போல் பேசிக்கொண்டிருந்த நிர்மலாவுக்கு, ஜாமீன் ரத்து ஆகும் என்று சொன்னதும் அருள் எங்கே பறந்து போச்சு என்று தெரியவில்லையே. அட! இது எல்லாம் நடிப்பா? என்று அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர்.

Nirmaladevi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe