eps

டெல்லி சென்று திரும்பிய எடப்பாடி பழனிசாமி டீம், அங்கு நடந்த கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகளை அவரிடம் பகிர்ந்துள்ளனர்.

Advertisment

டெல்லியில் நிர்மலா சீதாராமனை இவர்கள் சந்தித்தபோது, அவர் கொடுத்த லிஸ்டில் 15 தொகுதிகள் இருந்ததாம். அந்த தொகுதிகள் அனைத்தும் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் என்பதால், இந்த லிஸ்டை பார்த்த வேலுமணி, தங்கமணி இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அருண்ஜெட்லியை சந்தித்துள்ளனர். அங்கு அவரோ, ஜனவரி மாதத்திற்குள் நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளோம். அதற்குள் கூட்டணியை முடிவு செய்து, தொகுதி பங்கீட்டை முடித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisment

இவற்றை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தவர்கள், பாஜக தகுதிக்கு இரண்டு தொகுதிகள் தரலாம். அதிகபட்சம் ஐந்தில் இருந்து ஏழு வரை தரலாம். 15 தொகுதிகள் எப்படி தர முடியும் என்று கூறியுள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, பாத்துக்கலாம் என கூறிவிட்டாராம்.