வேளாண் சட்டங்கள் ஒரு சீர்திருத்த முயற்சி... எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்புகின்றன... - நிர்மலா சீதாராமன் பேட்டி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், சீர்திருத்த முயற்சி என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் சட்டங்களில் எந்தவிதமான குழப்பங்களும் இல்லை. விளைபொருள்களின் விலை, வியாபாரிகள் குறித்து விவசாயிகளே முடிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் மீது விதிக்கப்பட்ட 8.5 சதவீத வரி இனிமேல் இருக்காது. ஆதாயம் கிடைக்கக் கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளைபொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். ஆனால் இந்தச் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் வதந்தி பரப்பி வருகின்றனர் எனவும் கூறினார்.

Nirmala setharaman
இதையும் படியுங்கள்
Subscribe