Advertisment

விடுவிக்கக்கோரிய முருகன், கருப்பசாமி: மனு தாக்கல் செய்யாத நிர்மலா தேவி

மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்று இந்த வழக்கில் 3 பேரையும் ஆஜர்படுத்த மதுரையில் இருந்து காவல்துறையினர் அவர்களை அழைத்து வந்தனர்.

Advertisment

நீதிமன்றத்தில், இந்த வழக்கிற்க்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால் சி.பி.சி.ஐ.டியால் போடப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் 3 பேரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நிர்மலாதேவி மனு ஏதும் தாக்கல் செய்யவில்லை.

படங்கள்: ராம்குமார், அண்ணல்

karuppasamy Murugan Professor nirmala devi issue
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe