Skip to main content

நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட்... ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு

Published on 18/11/2019 | Edited on 18/11/2019
srivilliputhur court



மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சாட்சிகள் விசாரிக்க இருந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இன்று நிர்மலா தேவி ஆஜராகவில்லை. 
 

இன்று, முதல் சாட்சியான தேவாங்கர் கல்லூரியின் தாளாளர் ராமசாமி ஆஜராகியுள்ளார். முருகன், கருப்புசாமி இருவரும் ஆஜராகியிருந்த நிலையில் நிர்மலாதேவி தொடர்ச்சியாக இந்த முறையும் ஆஜராகாததால் கட்டாயமாக ஆஜராக வேண்டும் என நீதிபதி கூறினார். மேலும் நிர்மலா தேவிக்கான ஜாமீனை ரத்து செய்து,  நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி கூறினார்.
 



 

இதுகுறித்து நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறுகையில், அவர் நிர்மலாதேசிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நேற்று என்னிடம் பேசினார். தன்னை தொடர்ச்சியாக மிரட்டுகிறார்கள். தனக்கு மன நலம் பாதிப்பதாக உள்ளது, என்னால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை, எனவே என்னை மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் தற்போது அவர் கட்டாயம் ஆஜராகும்படி சொன்னதால், வழக்கறிஞர்கள் அதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளோம் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு நிலத்தை விற்கமாட்டோம்!’  - தம்பதியர் மீது வழக்கு 

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
 case was filed against a couple who sold land due to caste differences

அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் தமிழ்ச்செல்வன். ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்துவரும் இவர், நில புரோக்கர்கள்  மூலம், அதே ஊரைச் சேர்ந்த வீரமணி மற்றும் அவருடைய மனைவி சொர்ணலதா ஆகியோருக்குச் சொந்தமான 5 சென்ட் நிலத்தை ரூ.44 லட்சத்துக்கு கிரயம் பேசி முடிப்பதற்காக, ரூ.21000 முன்பணம் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, கிரயப்பத்திரம் உள்ளிட்ட அனைத்துப் புதிய ஆவணங்களையும் தயார் செய்து, நில புரோக்கர்களுடன் வீரமணி தம்பதியர்  வீட்டுக்குச் சென்று, பத்திரப் பதிவு செய்துகொள்கிறோம் என்று கூறியபோது, “நீங்க என்ன ஜாதி?” என்று தமிழ்ச்செல்வனைப் பார்த்துக் கேட்டுள்ளனர். தான் இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று தமிழ்ச்செல்வன் சொன்னதும் “நாங்க உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த உங்களுக்கு இடத்தை விற்கமாட்டோம். வெளியே போ.” என்று வீரமணி தம்பதியர் விரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் காவல்நிலையம் சென்ற தமிழ்ச்செல்வன், தன்னை ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதாக புகாரளிக்க, வீரமணி மற்றும் சொர்ணலதா மீது  வழக்கு பதிவாகியுள்ளது.

Next Story

மாவட்ட கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்! அதிமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு! 

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
Case filed on ADMK Srivelliputur MLA Manraj
எம்.எல்.ஏ. மான்ராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மான்ராஜ் என்பவர் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இதே தொகுதிக்குட்பட்ட லட்சுமியாபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன்(45). இவர், விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளார். எம்.எல்.ஏ. மான்ராஜின் மனைவி வசந்தி மாவட்டத்தின் ஊராட்சிக் குழுத் தலைவராக உள்ளார். 

கணேசன், நேற்று வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ‘நான் விருதுநகர் மாவட்ட ஊராட்சிக் குழு 3வது வார்டு உறுப்பினராக உள்ளேன். எனது வார்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிதி ஒதிக்கீடு செய்யவில்லை. இதுகுறித்து மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். இதனால், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் வசந்தி மற்றும் அவரது கணவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான மான்ராஜ் ஆகியோர் எனக்கு மிரட்டல் விடுத்து வந்தனர். 

Case filed on ADMK Srivelliputur MLA Manraj
கணேசன்

கடந்த திங்கட்கிழமை என்னை செல்போனில் தொடர்புகொண்ட எம்.எல்.ஏ. மான்ராஜ், ‘டிச. 28ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று பேசினால், கொலை செய்துவிடுவேன்’ என மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எம்.எல்.ஏ. மான்ராஜ், அவரது மனைவி வசந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். 

கணேசன் கொடுத்த புகாரை பெற்ற வன்னியம்பட்டி போலீஸார், எம்.எல்.ஏ. மான்ராஜ் மற்றும் அவரது மனைவி மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஆடியோ ஒன்று வெளியாகி அது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியை பரபரக்கச் செய்துள்ளது. அந்த ஆடியோவில், “செல்வம், உன் வீட்ல ஒருத்தன் வந்திருக்கான் பாத்தியா; உன் வீடு புகுந்து.. உன் வீட்டுக்குள்ளேயே கொலை நடந்திடும். நெட்ல இருக்கிறதலாம் எடுத்து குரூப்புல போடுவதற்கு இவன் யாரு? நான் பேசின ஆடியோவை எடுத்து எல்லா ஏ.டி.எம்.கே. குரூப்புலையும் போட்டிருக்கான். நான் ஆள் அனுப்புறேன்; உன் வீட்ல கொலை நடக்கலானா.. அவன இன்னிக்கு சோலிய முடிக்கல.. இன்னிக்கு உன் வீட்ல கொலை நடக்கும்” என கொலை மிரட்டலும், மிகவும் ஆபாசமாக பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது, எம்.எல்.ஏ. மான்ராஜ், கணேசனை மிரட்டிய ஆடியோ என சொல்லப்படுகிறது.