Skip to main content

BREAKING : நீதிமன்றம் வந்த நிர்மலா தேவியிடம் நக்கீரன் கேட்ட கேள்விகள்... அவரது பதில்!  

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
Nirmala Devi Issue


இன்று (01-11-2018) ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட நிர்மலாதேவி, பத்திரிகையாளர்கள் அவரை நெருங்கிவிடாதபடி கடும் கட்டுப்பாட்டுடன் விறுவிறுவென அழைத்துச் செல்லப்பட்டார். 
 

பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவரும் இதற்கு முன்பு நீதிமன்றத்துக்கு வந்தபோது பத்திரிகையாளர்களிடம் பேச முயன்றனர். போலீஸைத் தாண்டி பேசினர். ஆனால், நிர்மலாதேவி மிகவும் இறுக்கமாக பத்திரிகையாளர்களிடம் எதுவும் பேசாமலேயே இருந்தார். 
 

அவரை அழைத்து வந்த காவலர்கள் முன்னே கைகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டும், பின்னே அவரைப் பிடித்து தள்ளிக்கொண்டும் சென்றனர். இத்தகைய நெருக்கடிக்கிடையே யாரும் நிர்மலாதேவியை எளிதில் அணுக முடியாமல் இருந்தது. 
 

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டு வாகனத்திலிருந்து நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லும் பாதையில் ஏற்பட்ட குழப்பத்தால் ஏற்பட்ட சிறிய இடைவெளியில் நிர்மலாதேவியை நெருங்கினோம்.
 

"முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்கள் தரப்பு கருத்தை பத்திரிகையாளர்களிடம் சொன்னார்கள், ஆனால் நீங்கள் இதுவரை எதுவுமே வாய்திறக்கவில்லையே?" என்று கேட்டோம். கோபமடைந்த காவலர்கள், "எதுவும் பேசாதீங்க சார்..." என்று நம்மை தடுத்தார்கள். "கேள்வி கேட்பதில் என்ன மேடம் தவறு? நீங்க ஏன் அவரைப் பேசவிடமாட்டேன்றீங்க?" என்று கூறி நிர்மலாதேவியைத் தொடர்ந்தோம்.
 

 "சொல்லுங்க... நீங்கள் கொடுத்த வாக்குமூலம் முற்றிலும் பொய்யானது என்று முருகன் கூறியுள்ளார், உங்கள் பதில் என்ன? சிறைக்குள் நீங்கள் புலம்புவதாகக் கேள்விப்பட்டோம், வெளியில் சொல்ல என்ன தயக்கம்? வேறு இடத்திலிருந்து உங்களுக்கு அழுத்தம், மிரட்டல் வருகிறதா?" என்று கேட்டுக்கொண்டே நாம் பின்னே செல்ல, இதுவரை பத்திரிகையாளர்களை நிமிர்ந்தும் பார்த்திராத வகையில் கொண்டு செல்லப்பட்ட  நிர்மலா தேவி, திரும்பி நம்மை பார்த்தார். 
 

அவரது பார்வையில் இறுக்கம், சோகம், எதையோ சொல்ல விரும்பி சொல்ல முடியாத தவிப்பு அனைத்தும் சேர்ந்து மெளனமாக வெளிப்பட்டது. அந்த மௌனத்துக்குள் பல பெரிய  உண்மைகள் உறைந்து மறைந்து இருப்பதை நம்மால் உணர முடிந்தது. அவரை வாய் பேச விடாமல் கூட்டிச் சென்றுவிட்டது காவல்துறை.     
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.