nirmaladevi 600.jpg

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். நிர்மலாதேவியை விருதுநகரில் வைத்து சிபிசிஐடி காவல்துறையினர் 5வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த ஆடியோவில் உள்ளது பேராசிரியை நிர்மலா தேவியுடையது என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் நடந்த குரல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.