Skip to main content

கார் கண்ணாடியை உடைத்து நிர்மலாதேவி ரகளை! -தொடர் மிரட்டலால் மனநிலை பாதிப்பு?

Published on 26/10/2019 | Edited on 26/10/2019

“குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல், வேலை எதுவும் செய்யாமல், ஊராரின் ஏளனப் பார்வைக்கு வேறு ஆளாகி, வழக்கையும் சந்தித்து வருவது எத்தனை கொடுமையானது தெரியுமா? இந்த மன அழுத்தம்தான் பொது இடங்களில் ஒருமாதிரியாக நடக்கச்செய்து என்னை வேடிக்கைப் பொருளாக்கிவிட்டது. உளவியல் பிரச்சனைகளுக்காக  சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டது.” 
-நிர்மலாதேவியின் இந்த உள்ளக்குமுறல் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். 

 

nirmala devi

 

கடந்த 9-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற வளாகத்தில் மயக்கம் போட்டு விழுந்த நிர்மலாதேவி, உடல் நிலை மற்றும் மனநிலை காரணமாகவோ என்னவோ, கடந்த 23-ஆம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
‘நாளைதானே தீபாவளி! இன்று அதிகாலையிலேயே இது என்ன சத்தம்?’ என்று அருப்புக்கோட்டை ஆத்திபட்டி ஏரியாவில் நிர்மலாதேவி தங்கியிருக்கும் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து பார்த்தார்கள்.  அப்போது,  வீட்டிலிருந்த பொருட்களை தெருவில் வீசிக்கொண்டிருந்தார் நிர்மலாதேவி. வீட்டுக்கு எதிரில் நின்றுகொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரரின் கார் மீது கற்களை வீச, கார் கண்ணாடி உடைந்தது. 

 

nirmala devi

 

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், நிர்மலாதேவியின் இச்செயலை அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலையத்துக்கு தகவலாகத் தெரிவித்தனர். உடனே, காவல் ஆய்வாளர் அன்னராஜ் நிர்மலாதேவியின் வீட்டுக்கு விரைந்தார். நிர்மலாதேவியின் அண்ணன் ரவியும் அங்கு வர, உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது அந்த வீடு. பலதடவை கூப்பிட்டும் நிர்மலாதேவி கதவைத் திறக்கவே இல்லை. தற்போது, நிர்மலாதேவியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்புக்காக காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

 

devi

 

தனக்கு போனில் மிரட்டல் வருவதாகவும், தனது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தார் நிர்மலாதேவி. பசும்பொன் பாண்டியனும் கவர்னரை மிரட்டுவதற்கு ஆளும்கட்சியினருக்கு  இந்த வழக்கு ரொம்பவே பயன்படுகிறது என்று பேட்டியெல்லாம் அளித்தார்.   

உண்மையிலேயே நிர்மலாதேவிக்கு  என்னதான் ஆச்சு? 
 

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.