2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Advertisment

nirbhaya issue

இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் அதிரடியாக கைதுசெய்தனர். இதில் குற்றவாளி ராம் சிங் கடந்த 2013ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொரு குற்றவாளி சிறார் பள்ளியில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து மீதம் உள்ள அக்‌ஷ்ய், முகேஸ், பவான், வினய் சர்மா நான்கு குற்றவாளிகளுக்கும் 2017 ஆம் ஆண்டு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. அந்த நான்கு பேரும், தற்போது சிறையில் மன அழுத்ததில் உள்ளதாகவும், அதனால் அவர்கள் நால்வரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாதவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் தூக்கிலடப்படும் இடத்தை மூத்த அதிகாரிகள், திகார் காவல் ஆணையர் சந்தீப் கோயல் உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.