நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணி அமைப்பினர் 9 பேர் கைது!

Nine people hinduduva people  have been arrested in suriya incident at madurai

மதுரை முனிச்சாலை சந்திப்பில் இந்து முன்னணி அமைப்பின் ஒரு பிரிவான இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் திரைப்பட நடிகர் சூர்யாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்துவரும் நடிகர் சூர்யாவைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் மறைவாக நின்று, நடிகர் சூர்யாவின் புகைப்படம் பொருத்திய உருவபொம்மைக்குதீ வைத்து, கோஷமிடஆரம்பித்தனர். இதைப் பார்த்த காவல்துறையினர் உருவ பொம்மையில் இருந்துவரும் தீயை அணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

madurai suriya
இதையும் படியுங்கள்
Subscribe